உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலைத்திருவிழா போட்டிகளில் அசத்திய பள்ளி மாணவர்கள்

கலைத்திருவிழா போட்டிகளில் அசத்திய பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது. உதவித் திட்ட அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். நேற்று முன்தினம் அரசு பள்ளிகளும், நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளும் பங்கேற்றன. மாணவ, மாணவிகள் மாறுவேடம், ஆங்கிலம், தமிழில் மழலையர் பாடல், தமிழ், ஆங்கிலத்தில் கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், களிமண் பொம்மைகள் செய்தல், நாட்டுப்புற நடனம், குழு நடனத்தில் பரதம், தனிநபர் பரதம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். 69 நடுவர்கள் கண்காணித்து தேர்வு செய்தனர். வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மதுரை, கோவையில் முறையே அக்.,27, 28ல் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் பிரிட்டோ செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை