வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல்
திண்டுக்கல் : வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வரி வசூல் பணி நடந்து வருகிறது. இதற்காக 16 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., போஸ்டல் உட்பட பல்வேறு வகைகள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டும் வரி செலுத்தாத வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் வரி செலுத்தாத மவுன்ஸ்புரம் 5வது தெரு, நந்தவனம் ரோடு, கிழக்கு கோவிந்தபுரம் ரோடு, மயான ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 5 வணிக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தாடிக்கொம்பு ரோட்டில் ரூ.10 லட்சம் செலுத்தாத காலிமனை கையகப்படுத்தப்பட்டது.