மேலும் செய்திகள்
டூவீலர் மினி லாரி மோதல்; அண்ணன், தம்பி பலி
07-Jan-2025
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்ட் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடந்த ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங்கில் வெற்றி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். தமிழ்நாடு மாநில அளவிலான ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் போட்டி திருச்சியில் நடந்தது. இதில் பங்கேற்ற ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் வி. பிரேமஹர்சன், ஆர்.ஜே. ஜனமோகன பரசுராம்,7ம் வகுப்பு மாணவன் ஜி.வருண் பிரசாத் மூவரும் முதல் 3 இடங்களை பிடித்தனர். இவர்கள் தென்னிந்திய அளவில் பாண்டிச்சேரியில் நடக்கும் போட்டிக்கு தேர்வாகினர். மாணவர்களை பள்ளி தாளாளர் ரத்தினம், செயலாளர் சங்கீதா, அலுவலக மேலாளர் வாணி, பள்ளி முதல்வர் சிவா கவுசல்யாதேவி பாராட்டினர்.
07-Jan-2025