உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் எழுவர் கால்பந்து போட்டிகள் 

திண்டுக்கல்லில் எழுவர் கால்பந்து போட்டிகள் 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், ஓட்டல் ஸ்வாகத் கிராண்ட் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எழுவர் கால்பந்து போட்டிகள் தொடங்கியது.பார்வதீஸ் அனுகிராஹா மைதானத்தில் நடந்த இதில், அக்சுதா அகாடமி கால்பந்து அணி, பண்ணை பள்ளி அணி மோதியதில் 3:1 என்ற கோல்கணக்கில் அக்சுதா அணி வெற்றி பெற்றது. ஜான்வித்ராங் 2, ரக்சன் 1 என கோல் அடித்தனர்.எஸ்.எஸ்.எம்., அகாடமி அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரமம் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. பரணி, ரிக்கேஷ், தாகேஷ் கோல் அடித்தனர். எம்.எஸ்.பி., சோலை நாடார் பள்ளி, ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி இடையேயான போட்டியில் 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. எம்.எஸ்.பி., அணியின் திருகுமரன், வசந்த், வாசவி அணி தருண் சஞ்சயும் கோல் அடித்தனர். ரேடியன்ஸ் பப்ளிக் பள்ளி அணிக்கு எதிரான போட்டியில் பார்வதீஸ் அனுகிரஹா பள்ளி அணி 8:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் கவின்பாண்டி 4, டூடோ 3, ருகன்ஜெய் கோல் அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி