உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-

கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-

மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மசாலா பாக்கெட்கள், சிறுவர்கள் உண்ணும் தின்பண்டங்கள், முட்டை போன்ற உணவுப் பொருட்கள் பல மாதங்களாக விற்பனையாகாமல் ஸ்டாக் வைத்து காலாவதி ஆனது கூட தெரியாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். இது கிராமப்புறத்தில் உள்ள கடை உரிமையாளர்களின் அறியாமையும் முக்கிய காரணமாக உள்ளது.பொருட்களை வாங்கும் சிலர் காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களை கண்டித்து செல்கின்றனர்.காலாவதி தேதியை பார்க்க தெரியாத சில முதியவர்களும், சிறுவர்களும் அறியாமையால் அந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.உணவு பொருள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அந்த உணவு பொருட்களில் நிறுவனத்தின் பெயர், விலாசம் உள்ளிட்ட பல விஷயங்களை பெரிதாக காட்டுகின்றனர். ஆனால் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவைகளை கண்ணுக்குத்தெரியாத வகையில் ஏதாவது ஒரு மூலையில் பாக்கெட்களில் பிரின்ட் செய்கின்றனர்.சில உணவுப் பொருட்களில் காலாவதி தேதி இல்லாமல் விற்கின்றனர்.காலாவதி உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கிராமங்களில் சிறுவர்கள் பயிலும் தொடக்கப் பள்ளிகளின் அருகே சிறிய கடைகள் அமைத்து காலாவதி பொருட்கள், கலப்பட பொருட்கள் விற்பனை அதிகமாக நடக்கிறது.கோதுமை மாவுகளில் மைதா , மிளகில் பப்பாளி விதை , சிறுதானியங்களில் மண் , தின்பண்டங்களில் அதிகமான நிறமிகளை பயன்படுத்துவது என உணவு பொருளில் கலப்படம் அதிகரித்துள்ளது.உணவகங்கள், துரித உணவகங்களில் விற்பனையாகாத உணவுகளை பல நாட்கள் பிரிட்ஜ்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொய்வின்றி தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
செப் 25, 2024 18:29

அடிமாட்டு விலைக்கு தரலேன்னா யாரும் வாங்க மாட்டாங்க. ஒரு பாக்கெட் மிக்சர் 10 ரூவாய். அதில் ஒண்ணு வித்தா 2,3 ரூவா லாபம் கிடைக்கும். ஒரு பாக்கெட்டை காலாவதின்னு தூக்கி போட்டா 7 ரூவா நஷ்டம். யாரு குடுப்பா? இதுக்கு பேசாம ஆய்வுக்கு வரும் அதிகாரிக்கு அஞ்சோ, பத்தோ வெட்டினா கமுக்கமாப் போயிடுவான். எங்கேயோ எப்பவோ ஒரு பையன் காலாவதி குளிர்பானம் குடிச்சு செத்தா ஆய்வு செய்யறோம்னு சொல்லி நாலஞ்சு நாள் கடைக்கு சீல் வெச்சிட்டு பிறகு பிசினஸ் மாமூலா நடக்கும். யாரும் மாட்ட மாட்டாங்க. ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கு. உடுங்க. இதுதான் களநிலவரம்.


Bhaskaran
செப் 25, 2024 14:57

நெடுஞ்சாலை உணவகங்களின் அருகே உள்ள கடைகளில் காலாவதியான மற்றும் போலி பிராண்ட் விற்பனை சக்கைபோடு போடுகிறது குறிப்பாக அரசு விரைவு பேருந்து நிறுத்தும் இடங்களில் இது மிக மிக மிக அதிகம் கரெக்ட் ஆக மாமூல் வந்துவிடுவதால் அதிகாரிகள் கப்சிப். கழிவறை பராமரிப்பு இல்லை சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாய் அதிகாரிகள் குடும்பத்துடன் மீளாநரகம்போவார்கள்


kannan
செப் 25, 2024 14:29

இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொய்வின்றி தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.நல்லா சொன்னீங்க. தங்கள் பணிகளை செய்தாலே போறும். kannan


முக்கிய வீடியோ