புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்
செந்துறை: -செந்துறையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சாபர்சாதிக், வசந்தன் சோதனையில் ஈடுபட்டனர். 2 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதை பறிமுதல் செய்த அலுவலர்கள் கடைக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 கடைகளுக்கு அபாரதம் விதித்தனர். தொடர்ந்து 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.