மேலும் செய்திகள்
பொறியியல் கல்லுாரியில் ரத்ததான முகாம்
30-Aug-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்வதை அதிகரிக்கவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள்'ஷாட்பிலிம்'தயாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் அரசு மருத்துவமனை 2023ல் தரம் உயர்த்தப்பட்டு 500 படுக்கை வசதிகளுடன் திறக்கப்பட்டது. இதனால் பல பிரச்னைகளுக்காக மதுரைக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இங்கு தினமும் விபத்துக்கள்,அறுவை சிகிச்சை,குழந்தை பேறு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு பல யூனிட் ரத்தம் தானமாக தேவைப்படுகிறது. ரத்த வங்கி மூலமாக பலரும் ரத்ததானம் செய்கின்றனர். இருந்தபோதிலும் தேவைகள் அதிகரித்த வண்ணமாக தான் உள்ளது. மருத்துவக்கல்லுாரியிலும் 200க்கு மேலான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் தற்போது புதிய முயற்சியாக ரத்ததானம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் 15 பேர் ஒரு குழுவாக இணைந்து'ஷாட்பிலிம்'ஒன்றை தயாரித்து வருகின்றனர். விரைவில் இந்த விழிப்புணர்வு'ஷாட்பிலிம்'மருத்துவமனை நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று வெளியிடப்பட உள்ளது.ஏற்கனவே மருத்துவ மாணவர்கள் ரத்ததான விழிப்புணர்வு பாடல் ஒன்றை அவர்களாகவே எழுதி பாடி யூடியூப்பில் பதிவேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
30-Aug-2024