உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல் : அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கவுரவத்தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். தலைவர் ஆன்செலம் ஜோசையா, துணை த்தலைவர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ