உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிலம்ப விளையாட்டு போட்டிகள்

சிலம்ப விளையாட்டு போட்டிகள்

செம்பட்டி; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆத்தூர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில், அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மனோகர் கல்வி அறக்கட்டளை, 'சி' அறக்கட்டளை சார்பில், சிலம்ப விளையாட்டு போட்டிகள் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் கண்ணன், பசுமை வாசல் பொறுப்பாளர் கோகுல்நாத் முன்னிலை வகித்தனர். மதுரை சாய் மார்சியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர் விஜயபாஸ்கர், சிலம்ப போட்டிகளை வழி நடத்தினார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆத்தூர் சிலம்ப பயிற்சியாளர் லெனின் குமார், செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ