உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  எஸ்.ஐ.ஆர்., பணி அனைத்து கட்சி கூட்டம்

 எஸ்.ஐ.ஆர்., பணி அனைத்து கட்சி கூட்டம்

திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணிகள் கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் தேதி டிச. 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. குடியிருப்பில் இல்லாத, இறப்பு,நிரந்தர குடிபெயர்ந்தோர், இரட்டை பதிவு விவரங்கள் அடங்கிய பட்டியல் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டது. சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ