சீதா ராமர் திருக்கல்யாணம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மலைக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் முதல் முறையாக சீதா ராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது.இதையொட்டி ஹோம சாந்தி பூஜைகள், வாரணம் ஆயிரம் பாடல்கள் பாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி, கால்பந்து கழக செயலாளர் சண்முகம், ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன், அபிராமி கோயில் அறங்காவலர் வீரக்குமார், தி.மு.க., மாநகர் பொருளாளர் சரவணன், கோயில் செயல் அலுவலர் யுவராஜ் செய்தனர்.