உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர், ரோடு வசதிகளில் சிக்கி தவிக்கும் சிவகிரிபட்டி

குடிநீர், ரோடு வசதிகளில் சிக்கி தவிக்கும் சிவகிரிபட்டி

பழநி; பழநி ஒன்றியத்திற்குட்பட்ட சிவகிரி பட்டி ஊராட்சியில் குடிநீர் ,சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமத்தில் உள்ளனர். மருத்துவ நகர், திருநகர், எம்.ஜி.ஆர்., நகர், சிவகிரி பட்டி, தட்டான்குளம், ராமநாத நகர், மயிலாடும்பாறை பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் பழநி முருகன் கோயிலுக்கு கால பூஜைக்கு அபிஷேக நீர் எடுத்து செல்லும் மருத்துவ நகரில் உள்ள பைப் லைன் சாலை சேதமடைந்துள்ளது. மருத்துவ நகரில் சாக்கடை முறையாக இல்லை.ரோடுகள் சேதத்தால் பள்ளி குழந்தைகள் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சாலையில் பயணிக்கும் முதியவர்கள் சிரமம் அடைகின்றனர். டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். ரோடு இன்றி அவதி முருகானந்தம், பேன்சி கடை உரிமையாளர், ராமநாதநகர் : ராமநாத நகர் பகுதியில் ரேஷன் கடை ரோடு பல மாதங்களாக போடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. ராமநாதநகர் சிவகிரி பட்டி பைபாஸ் பகுதியில் குப்பை அதிகம் கொட்டப்படுகின்றன .இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். நடந்து செல்ல சிரமம் கார்த்திகேயன், தனியார் நிறுவன ஊழியர், மயிலாடும்பாறை : மயிலாடும்பாறை பகுதியில் சாக்கடை இல்லை. குடிநீர் ,சாலை வசதிகளும் இல்லை. தெரு விளக்கு வசதி சரியாக இல்லாமல் இரவு நேரத்தில் பெண்கள் அப்பகுதியில் நடந்து வர சிரமம் அடைகின்றனர். பாம்பு தொல்லை அதிகம் உள்ளது. சாலை சேதமடைந்துள்ளதால் சிறுவர்கள் ,குழந்தைகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். மாசடைந்த குடிநீர் செந்தில்குமார், விவசாயி, சிவகிரி பட்டி : குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது .அப்படி வந்தாலும் குடிநீர் துர்நாற்றத்துடன் வருகிறது. தொட்டிகளில் சேமித்து வைக்கும் போது தண்ணீர் நிறம் மாறி உள்ளது. இதனால் இதனை பயன்படுத்த அச்சப்படும் சூழல் உள்ளது. சாலை வசதிகள் முறையாக இல்லை. வீடுகளுக்கு வந்து குப்பை வாங்குதில்லை. தெருக்களிலும் குப்பை குவிந்துள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை