உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுார் ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு

அய்யலுார் ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு

வடமதுரை :அய்யலுார் களர்பட்டி ரயில்வே லெவல்கிராசிங் கேட் தினமலர் செய்தி எதிரொலியாக மின்சக்தியால் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.இதன் ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரத்தில் பாதசாரிகள் நடந்து கடக்க உதவும் வகையில் இருக்கும் பாதையை பயன்படுத்த முடியாதவாறு அடைப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தி கேட் மூடியிருக்கும் நேரத்தில் பாதசாரிகள் நடந்து கடக்கும் வகையில் ஏற்கனவே இருந்த பாதையை ஏற்படுத்தினர். ரயில்வே கேட்டில் நீண்ட நாட்களாக இருந்த இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்க உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை