உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  20 ஆண்டு பால பிரச்னைக்கு தீர்வு

 20 ஆண்டு பால பிரச்னைக்கு தீர்வு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் 20 ஆண்டுகளாக பிரச்னைக்குரிய பாலம் வேலையை ஒரு வழியாக நெடுஞ்சாலை துறையினர் துவக்கி உள்ளனர். சாவடி பஸ் நிறுத்தத்தில் ரோட்டின் குறுக்கே சிறு பாலம் உள்ளது. இதில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் ஓடுவது வழக்கமாக இருந்தது. பேரூராட்சி சார்பில் பாலத்தை புதுப்பிக்க பலமுறை நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தினர். இருப்பினும் பாலம் புதுப்பிக்க வில்லை. பேரூராட்சிக்கு இந்த பாலம் பிரச்னை பெரிய இடையூறாக இருந்து வந்தது. இந்நிலையில் மூன்று நாட்களாக மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோடு முழுவதும் ஓடியது. பேரூராட்சி செயல் அலுவலர் கோபி, கழிவு நீர் ரோட்டில் ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. உடனடியாக பாலத்தை புதுப்பிக்க கண்டிப்பு காட்டினார். பேரூராட்சி நிர்வாகத்தின் உறுதியான நடவடிக்கையால் நெடுஞ்சாலைத்துறை பாலம் கட்டும் பணியை தற்போது துவக்கி உள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளாக தொடர்ந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ