உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாமனாரை பாட்டிலால் தாக்கிய மருமகன்

மாமனாரை பாட்டிலால் தாக்கிய மருமகன்

வேடசந்துார்: பாலப்பட்டி புதுவாணிக்கரையை சேர்ந்தவர் கொத்தனார் லோகநாதன் 48. இவரது மகள் மணிமேகலை 22. இவருக்கும் சித்துார் புளியம்பட்டியைச் சேர்ந்த சிவாவுக்கும், 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் ,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மணிமேகலை தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு வந்த சிவா மனைவி, மகனை அனுப்பி வைக்கும்படி மாமனார் லோகநாதனிடம் பேசி உள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவா பீர் பாட்டிலால் லோகநாதனின் தலையில் அடித்தார். தடுத்த மணிமேகலைக்கும் அடி விழுந்தது. கூம்பூர் எஸ்.ஐ., விஜயபாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை