உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

 தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நடந்துவரும் கட்டட விரிவாக்கப்பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்., ஆய்வு செய்தார். இங்கு அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய கட்டட பணிகள் நடந்து வருகிறது. இதனை பார்வையிட பொது மேலாளர் மதுரையிலிருந்து சிறப்பு ரயிலில் வந்தார். பார்க்கிங், விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: திண்டுக்கல்லில் ரூ. 22.71 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின் துாக்கி வசதியுடன் கூடிய 6 மீட்டர் அகல நடை மேம்பாலப் பணிகள், கூரை நீட்டிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 2026 மே திறக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை