கல்லுாரியில் விளையாட்டு விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. காலனி திருஇருதய கலை அறிவியல் கல்லுாரியில் 9ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லுாரி செயலாளர் ஜேசுதாஸ், முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அமர்நாத் கலந்து கொண்டார். உடற்கல்வி இயக்குனர் சிவானந்தம் வரவேற்றார். ஞானப்பிரகாசம், லுார்துராஜ் ஜெயபிரகாஷ் பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் தாரணி நன்றி கூறினார்.