கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமான் பலி
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி கரந்த மலை உள்ளது. இங்கிருந்து ஆண் புள்ளிமான் ஒன்று இரை தேடி கணவாய்பட்டி பங்களா விற்குள் நுழைந்தது. இதை கண்ட தெரு நாய்கள் புள்ளிமானை துரத்தியது. நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய புள்ளிமான் கல் துாண் மீது மோதி இறந்தது. வனவர் ஆறுமுகம் வனக்காப்பாளர் பீர்முகமது தலைமையில் வந்த வனத்துறையினர் விசாரித்தனர். பரிசோதனைக்கு பின் வனப்பகுதிக்குள் புதைத்தனர்.