உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்தில் வென்ற ஸ்ரீ குருமுகி பள்ளி

கால்பந்தில் வென்ற ஸ்ரீ குருமுகி பள்ளி

தாடிக்கொம்பு : கோவை ரத்தினம்மாள் சர்வதேச பள்ளியில் சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கு இடையே நடந்த கிளஸ்டர் கால்பந்து போட்டிகள் பல பிரிவுகளில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்ச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 148 சி.பி.எஸ்.சி., பள்ளிகள் கலந்து கொண்டன. ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் கலந்துகொண்டு மண்டல அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் திவ்யா, நிர்வாக இயக்குனர்கள் செந்தில் குமார், டாக்டர் லக்சித், கால்பந்து பயிற்சியாளர் கமலேஷ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ