ஸ்டாலின் முகாம்;அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்தும், அத்திக்கோம்பை, லெக்கையன்கோட்டை ஊராட்சிகளில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் பேசியதாவது: ஒட்டன்சத்திரத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் விரை வில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். என்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 730 மருத்துவமனைகளில் விபத்தில் அடிபட்டு 48 மணி நேரத்திற்கு ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கான செலவில் ரூ.2 லட்சம் வரை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, சுகாதார அலுவலர் அனிதா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் சுவேதா, பி,டி.ஓ.,க்கள் காமராஜர், பிரபு பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் காசி முருக பிரபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், பாலு தர்மராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவப்பாக்கம் ராமசாமி, சிவராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஊராட்சி தலைவர் சிவராமகிருஷ்ணன், கிளை செயலாளர் சண்முகசுந்தரம், பிரதிநிதிகள் பொன் முருகன், ராஜரத்தினம், ஊர் முக்கியஸ்தர் சவடமுத்து கலந்து கொண்டனர்.