சங்கர் பொன்னர் பள்ளியில் தபால்தலை வெளியீடு
பழநி: பழநி தொப்பம்பட்டி அருகே தும்பலப்பட்டி அரசு உதவி பெறும் சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் அமைச்சர் சக்கரபாணி புதிய குளோபல் கேம்பஸ் கட்டடத்தை துவங்கி வைத்தார். இதோடு வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். இதை அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர். நீதிபதி கல்யாண சுந்தரம், ஆர்.கே.ஆர் பள்ளி தாளாளர் ராமசாமி, ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி தாளாளர் கோவிந்தசாமி, அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தருமலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜ் ,அறக்கட்டளை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.