பள்ளியில் மாநில ஹாக்கி போட்டி
திண்டுக்கல்: புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான மாநில ஹாக்கி போட்டி நடைபெற்றது.முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், திருச்சி தியாகேசர் மேல்நிலைப் பள்ளி 2ம் பரிசும், மதுரை அருளாண்டவர் மேல்நிலைப்பள்ளி 3ம் பரிசும், மதுரை எஸ்.பி.ஓ.ஏ., அணி 4ம் பரிசும் வென்றன . பிரான்சிஸ் சேவியர் பள்ளி தாளாளர் சகாயமேரி, பாதிரியார் அமலா தாஸ் தலைமை வகித்தனர். பரிசு கோப்பைகளை காஜா மைதீன், தி.மு.க., கிழக்கு பகுதி நகர செயலாளர் ராஜேந்திர பிரசாத், காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கிய ரோஜர் மில்டன், ஞானகுரு வழங்கினர். பதக்கங்கள் பிளவர் மில் உரிமையாளர் ரவி வழங்கினார். ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் சாரதி , சதீஷ் கண்ணன் செய்தனர்.