மேலும் செய்திகள்
பெண்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கம்
22-Sep-2024
திண்டுக்கல் : ஜி.டி.என்., கல்லுாரியின் பொருளாதாரம், வணிகவியல் துறைகள் சார்பில் இந்தியாவில் சிறு, குறு ,நடுத்தர தொழில்களின் நிலையான வளர்ச்சி உத்திகள், வாய்ப்புகள்,சவால்கள் என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை ரெத்தினம் முன்னிலை வகித்தனர். முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். பேராசிரியர் ரவிச்சந்தின் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் மார்க்கண்டேயன்,துணை முதல்வர் நடராஜன் வாழ்த்தினர். ஜி.டி.என்., கல்லுாரி மேலாண்மை நிர்வாகத் துறை பேராசிரியை சுபாஹினி,உமா சந்திரிகா பேசினர். மணிமகேஷ்வரன் நன்றி கூறினார். கருத்தரங்கை அருண், மதன், கருப்பையா, ரம்யா, சண்முகபிரியன் ஏற்பாடு செய்தனர்.
22-Sep-2024