/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜன.6 முதல் வேலை நிறுத்தம் அலுவலர் ஒன்றிய இணைப்பு கூட்டத்தில் முடிவு
ஜன.6 முதல் வேலை நிறுத்தம் அலுவலர் ஒன்றிய இணைப்பு கூட்டத்தில் முடிவு
வேடசந்துார்: ஜன. 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் வேடசந்துாரில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜோதி முருகன் தலைமை வகித்தார். செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன், வட்ட கிளை நிர்வாகிகள் குமரேசன், ரமேஷ்,முத்துக்கருப்பன் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.29ல் மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர கவன ஆர்ப்பாட்டம், ஜன. 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.