மேலும் செய்திகள்
டூவிலர் திருடிய நால்வர் கைது
16-Jun-2025
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் வீட்டுப்பாடம் செய்யாததால் தன்னைத்தானே கழுத்தில் சேதப்படுத்தி மர்ம நபர்கள் காயப்படுத்தியதாக மாணவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.வத்தலக்குண்டில் நேற்று காலை பள்ளி செல்லும் நேரத்தில் மர்ம நபர்கள் கழுத்து அறுத்து சென்றதாக ஆறாம் வகுப்பு மாணவர் புகார் கூறினார். வத்தலக்குண்டு போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் முதற்கொண்டு விசாரணையில் இறங்கிய போது மாணவரை யாரும் தாக்கியது தெரியவில்லை.இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் வீட்டுப்பாடம் செய்யாததால் மாணவரே கழுத்தில் சேதப்படுத்தி கொண்டு நாடகம் ஆடியது அம்பலமானது. இதன் பின் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
16-Jun-2025