மின்னல் தாக்கியதில் மாணவர்கள் காயம்
Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350
குஜிலியம்பாறை: மழை பெய்த போது குடை பிடித்து கொண்டு சிறுநீர் கழிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர். கருங்கல் கே.ஆனைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆணைபட்டி குணசக்தி 11, காச்சக்காரன்பட்டி பூவரசன் 11, இருவரும் 6 ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மதியம் 3:00 மணிக்கு மழை பெய்து கொண்டிருந்தது. இரு மாணவர்களும் ஒரே குடையை பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்க சென்றனர்.அப்போது மின்னல் தாக்கியதில் தீக்காயத்துடன் துாக்கி வீசப்பட்டனர். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.