உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் வட மதுரையில் திடீர் வெடிச்சத்தம்: மக்கள் அதிர்ச்சி

நத்தம் வட மதுரையில் திடீர் வெடிச்சத்தம்: மக்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வடமதுரை, எரியோடு உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 11:15 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை, வேடசந்தூர், நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் ஆறு ஆண்டுகளாக அவ்வப்போது அரை கி.மீ., தூரத்திற்குள் பலத்த வெடிச்சத்தம் கேட்பதாக பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது போலவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெடிச்சத்தத்திற்கு பின்னர் வெவ்வேறு பகுதிகளில் வசிப்போரிடம் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது வெடிசத்தம் நீண்ட தூரத்திற்கு கேட்கிறது என்பது உறுதி செய்ய முடிகிறது.இந்நிலையில், இம்மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி ,சாணார்பட்டி, வடமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் காலை 11:15 மணிக்கு மீண்டும் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சுமார் 50 கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் அடிக்கடி கேட்கும் இது போன்ற வெடி சத்தம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தங்கல்ராஜ்
பிப் 18, 2025 16:12

என்.ஐ.ஏ வந்து விசாரிக்கணும்.


Kasimani Baskaran
பிப் 18, 2025 14:56

கீழடி போல எதாவுது உருட்ட வசதியுள்ள்ள விஷயம் ஏதாவது கிடைக்கிறதா என்று தீம்க்கா ஆய்வு..


Sankare Eswar
பிப் 18, 2025 13:26

பயிற்சிக்காக ஜெட் விமானங்கள் அந்த பகுதியின் மேல் பார்த்திருக்கலாம். அந்த விமானங்கள் ஒலியின் வேகத்தை விட அதி வேகத்தில் பறக்கும்போது, அதன் பின் பகுதியில் ஏற்படும் மிக தாழ்ந்த அழுத்தம் ஏற்படும்போது சோனிக் பூம் என்ற பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டிருக்கலாம்.


Rajasekar Jayaraman
பிப் 18, 2025 13:18

ஊசி பட்டாசாக இருக்கும்.


Ramesh Sargam
பிப் 18, 2025 12:30

திமுகவினர் முறைகேடாக அங்குள்ள மலைகளை சுரண்டுகிறார்களா என்று கண்டுபிடிக்கவேண்டும்.


Naresh
பிப் 18, 2025 12:11

அந்தப் பகுதிகள் மலை சார்ந்த இடம் கல்குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் உள்ளனவா என்று கண்டறிய வேண்டும்.


Jayaraman Ramaswamy
பிப் 18, 2025 11:58

அங்கு எங்காவது பட்டாசு தொழிற்சாலை உள்ளதா.


புதிய வீடியோ