மேலும் செய்திகள்
அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி
21-Sep-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி,நேருஜிநகர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் மக்கள் அவதியடைந்தனர்.திண்டுக்கல் நேருஜிநகர், ஆர்.எம்.காலனி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மழைபெய்யும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. முன்னறிவிப்பில்லாமல் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் செய்வதறியாமல் தவித்தனர். மழையும் பெய்ததால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் இருளில் முடங்கினர். குழந்தைகள்,கர்ப்பிணிகள் நீண்ட நேரமாக கொசுக்கடியில் அவதியடைந்தனர். மின்வாரிய அதிகாரிகளை பொது மக்கள் தொடர்பு கொண்ட போதிலும் முறையான பதில் கிடைக்கவில்லை இதனால் தொடர்ந்து 2 மணி நேரமாக மக்கள் தவித்தனர். நேற்று முன்தினமும் இதேபோல் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் மின்வாரிய அதிகாரிகள் மீது கொதிப்பில் உள்ளனர். இதன்மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேருஜி நகர் உதவி மின்பொறியாளர் ரம்யா கூறியதாவது: அண்ணாநகர் பகுதி டிரான்பார்மரில் இன்சுலேட்டர் கருவி திடீரென வெடித்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. மழை பெய்து போதிலும் அலுவலர்கள் பிரச்னையை சரி செய்து தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்.
21-Sep-2024