உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் கோடை மழை

திண்டுக்கல்லில் கோடை மழை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நேற்று மாலை பெய்த மழையால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் வானம் மேக மூட்டத்துடனேயே இருந்தது. நேற்றும் பகல் பொழுது முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4:00 மணிக்குப் பிறகு தொடர்ந்து மழை விட்டு விட்டு இரவு வரை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் தேங்கியதால் டூவீலர்களில் சென்றவர்கள் சற்று அவதிக்குள்ளாகினர்.கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் வெப்பத்தின் தாக்கத்தால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் கருமேகம் பரவலாக சூழ்ந்த போதும், மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்ய துவங்கியது. கன்னிவாடி, மாங்கரை, கசவனம்பட்டி, காமாட்சிபுரம், கதிரனம்பட்டி பகுதியில் பகலில் துவங்கி சாரல் தொடர்ந்தது. இப்பகுதியில் அக்னி நட்சத்திர வெப்பத்தால் தவித்த மக்களுக்கு, நேற்றைய சாரல் மழை ஆறுதலாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி