கணக்கெடுப்பு பயிற்சி
சின்னாளபட்டி:சின்னாளபட்டி பேரூராட்சியின் 18 வார்டு பகுதிகளுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில் ஈடுபட உள்ள களப்பணியாளர்களுக்கான பயிற்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் லியோராஜ், உமாதேவி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். ஆத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 43 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் 800 நபர்களிடம் விவரங்களை சேகரிக்க உள்ளனர்.