உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயி இறப்பில் சந்தேகம்; மறியல்

விவசாயி இறப்பில் சந்தேகம்; மறியல்

எரியோடு : எரியோடு அருகே விவசாயி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். எரியோடு அருகே இ.சித்துார் மொங்குபெத்தன்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிவேல் 37, ஜன.3ல் வீட்டில் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். எரியோடு போலீசார் தற்கொலை வழக்கு பதிந்து விசாரித்தனர். முந்தைய நாள் இரவு தண்ணீர்பந்தம்பட்டி துவங்கி மொங்குபெத்தன்பட்டி செல்லும் ரோட்டில் பல இடங்களில் பழனிவேலை இருவர் தொடர்ந்து தாக்கியபடி சென்றதாக நேரில் பார்த்தவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இது தொடர்ந்து விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய எரியோடு போலீசாரிடம் உறவினர்கள் கோரினர். ஆனால் போலீசார் தாமதம் செய்தனர். அதிருப்தியான மக்கள் தண்ணீர்பந்தம்பட்டியில் மறியல் செய்தனர். இன்ஸ்பெக்டர் வேலாயுதம் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்க கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை