உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே ஸ்டேஷனில் தூய்மை இந்தியா திட்டப் பணி

ரயில்வே ஸ்டேஷனில் தூய்மை இந்தியா திட்டப் பணி

பழநி: பழநி ரயில்வே ஸ்டேஷனில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகள் ரயில்வே ஸ்டேஷனை தூய்மை செய்தனர். பழநி ரயில்வே ஸ்டேஷனில் பாரத் நர்சிங் கல்லூரி மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மதுரையில் இருந்து கோவை செல்லும் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். பிளாட்பார்ம், தண்டவாள பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ.,கணேசன், ஆர்.பி.எப்., எஸ்.ஐ., மயில் முருகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி