மேலும் செய்திகள்
நுால் வெளியீட்டு விழா தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு
27-May-2025
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு சி. எஸ். ஐ., மேல்நிலைபள்ளியில் தமிழ்ச் சங்கம் துவக்க விழா, கலை இலக்கிய விழா நடந்தது. தமிழ் சங்க தலைவர் மருதுஆறுமுகம் தலைமை வகித்தார். தியாகி சுப்பிரமணிய சிவா நற்பணி இயக்க செயலாளர் தங்கபாண்டி வரவேற்றார். த.மு.எ.க.ச. மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பட்டிமன்ற பேச்சாளர்கள் முல்லை நடவரசு, மாரிமுத்து, மகாலெட்சுமி ஆகியோர் மருதுஆறுமுகம் எழுதிய பயணங்களில் நான் என்ற புத்தகத்தை வெளியிட்டனர். நாதஸ்வர கலைஞர் ஜோதிமணி மங்கள இசை, பரதநாட்டிய கலைஞர் ஆனந்திஜீவா நடனம் நடந்தது. ஒன்றிய தலைவர் முருகன், முன்னாள் பேருராட்சி தலைவர் கனகதுரை, சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் தங்கராஜ், துணைத் தலைவர் விஜயன், சி. எஸ். ஐ. பள்ளி தலைமையாசிரியர் ஞானராஜன், ம.நீ.ம., மாவட்ட துணை ச்செயலாளர் லட்சுமிநாராயணன், பதிப்பாளர் வதிலைபிரபா பங்கேற்றனர். சுதாகர் நன்றி கூறினார்.
27-May-2025