உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழருக்கு துணை ஜனாதிபதி பதவி வாழ்த்தணுமே தவிர அரசியல் கூடாது: திருமாவளவனுக்கு ஜான்பாண்டியன் பதில்

தமிழருக்கு துணை ஜனாதிபதி பதவி வாழ்த்தணுமே தவிர அரசியல் கூடாது: திருமாவளவனுக்கு ஜான்பாண்டியன் பதில்

திண்டுக்கல்: ''விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழருக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுப்பதை வாழ்த்த வேண்டுமே ஒழிய அரசியலுக்காக வேஷம் போடக்கூடாது,'' என, திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறினார். அவர் கூறியதாவது: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது. கூட்டணி தலைவராக தமிழகத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி இருக்கிறார். த.ம.மு.க., யாருடன் பயணிக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளது. இதுவரை 25 ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது. மாணவர்கள் இடையே மது, கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழரா. தமிழருக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுக்கலாம் என்றால் அதனை வாழ்த்தணுமே தவிர அரசியலுக்காக வேஷம் போடக்கூடாது. துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதா கிருஷ்ணன் நல்ல மனிதர். அவர் துணை ஜனாதிபதி ஆவதை விமர்சனம் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்ற மசோதாவை வரவேற்கிறேன். அதை வரை முறைப்படுத்தி சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை