மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி தாய் பலிமகன், மகள் காயம்
13-Sep-2025
தாண்டிக்குடி, செப். 29- -கொடைக்கானல் -- வத்தலக்குண்டு ரோட்டில் டேங்கர் லாரி சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் மேலப்பசலையை சேர்ந்தவர் ஆறுமுகம் 50,இவர் நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் பெட்ரோல், டீசல் இறக்கி விட்டு, டேங்கர் லாரியில் வத்தலக்குண்டு நோக்கி சென்ற நிலையில் நண்டாங்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற சரக்கு லாரியில் மோதினார். இரு வாகனங்களும் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடன் வந்த ராமச்சந்திரன், வேல்குமார் ஆகியோர் காயமடைந்தனர். பண்ணைக்காட்டை சேர்ந்த வேலுபிரபாகரன் புகாரில் தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Sep-2025