மேலும் செய்திகள்
இலக்கு நிர்ணயம்: நாமக்கல் கலெக்டர் தகவல்
10-Oct-2025
திண்டுக்கல்: ''மாவட்டத்தில் 5 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக'' மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறினார். தமிழக வனத்துறை பசுமை தமிழகம் இயக்கம், கொழும்பு சையது முகமது அலிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சக்கம்பட்டி குளக்கரையில்பனை விதை நடும் விழா நடந்தது. மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் திலகவதி துவக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை, என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., ஸ்கவுட், தேசிய மாணவர் படையை சேர்ந்த 130 மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 200க்கு மேற்பட்டோர் 3 ஆயிரம் பனை விதைகள் விதைத்து தண்ணீர் ஊற்றினர். உதவி வனபாதுகாவலர் வேல்மணி நிர்மலா, ரேஞ்சர்கள் சவுந்திரராஜ், சுரேஷ், பாஸ்கரன் கலந்துகொண்டனர். வன அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ''மாவட்டத்தில் இந்தாண்டு 5 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நட உள்ளோம். இதுபோல் பல்வேறு அரசுத்துறை சார்பிலும் பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
10-Oct-2025