மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின் கோட்' வினியோகம்
28-May-2025
திண்டுக்கல் : ''கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 2-ல் சென்னை தலைமை செயலகம் முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்'' என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறினார்.திண்டுக்கல்லில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரியசாமி தலைமையில் நடந்தது. டாஸ்மாக் பணியாளர்களை இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைக்க வேண்டும். பணியாளர்களின் பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பெரியசாமி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றும் 30 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்யக்கோரி 22 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்காக பிப்ரவரியில் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு தீர்வு கிடைக்கும் என நம்பினோம். கிடைக்கவில்லை. டாஸ்மாக் விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க 'எண்டு டூ எண்டு' திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிலும் பல்வேறு இடர்பாடுகள் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. இதை களைய புதிய கணினி மென்பொருளை உருவாக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இதன் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி சென்னை தலைமை செயலகம் முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.
28-May-2025