உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாஸ்மாக் கடை முற்றுகை முயற்சி

டாஸ்மாக் கடை முற்றுகை முயற்சி

சாணார்பட்டி: நத்தம் அருகே செங்குறிச்சி குரும்பபட்டியில் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தமிழர் தேசம் கட்சியின் மாநில செயலாளர் பூமி அம்பலம் தலைமையில் செங்குறிச்சி குரும்பபட்டி, ஆலம்பட்டி, புதுப்பட்டி, வலசை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, கம்பிளியம்பட்டி ஆர்.ஐ., ராம்முரளி, வி.ஏ.ஓ., செல்வம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !