த.தே.க., கூட்டம்
நத்தம்: காந்தியார் கலையரங்கில் தமிழர்தேசம்கட்சி சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் போற்றுதல் குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை வகித்தார்.தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் குருமணிகண்டன், வைரவேல், மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம், வடக்கு மாவட்ட செயலாளர் ஆண்டி அம்பலம் முன்னிலை வகித்தனர். செல்வக்குமார் பேசினார். மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் மருத்துவரணி செயலாளர் அன்புஎழில், மாவட்ட அவைத் தலைவர் சேகர் கலந்து கொண்டனர்.