பஸ் மோதி ஆசிரியர் காயம்
வடமதுரை: பாடியூர் களத்து வீட்டை சேர்ந்தவர் பாலாமணி 54. நத்தப்பட்டி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு டூவீலரில் சென்ற போது பாடியூர் செட்டிமேடு பகுதியில் அரசு பஸ் மோதி காயமடைந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.