உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே

மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே

வந்தால் மகிழ்ச்சி

-எம்.என்.பிரத்திகாவடமதுரை தமிழகத்தில் தற்போது 2 மொழிகள் கற்கும் நிலையில் கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு என்பது சிறப்பானது. இந்த வாய்ப்பு ஏற்கனவே சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. எங்களை போன்ற அரசு, அரசு உதவி பெறும் மாநில திட்ட பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. பொருளாதார வசதி படைத்த மாணவர்கள் தனியாக ஹிந்தி படித்து தேர்வு எழுதுகின்றனர். அரசியல் பார்வை இல்லாமல் நீண்ட கால நோக்கில் மும்மொழி கொள்கை நடைமுறைக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

வளர்ச்சிக்கு நல்லது தானே

-சந்தோஷ்நத்தம் நாளிதழ்கள் மூலம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்ன என்பதை தெரிந்து கொண்டேன். மத்திய அரசு நாங்கள் தற்போது படித்து வரும் தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதில் சாராம்சமாக உள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இந்த கல்விக் கொள்கை மூலம் மேலும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் எனக்கு எதிர்காலத்தில் தொழில், வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பாக இருக்கும். சில அமைப்புகள் இதனை எதிர்க்கின்றனர். அது ஏன் என எங்களுக்கு தெரியவில்லை. மாணவர்கள் மேலும் ஒரு மொழியை கற்றுக் கொள்வதால் அவர்கள் வளர்ச்சிக்கு நல்லது தானே.

பள்ளியிலே கிடைப்பதால் மகிழ்ச்சி

-கிஷோர்குமார்பழநிமாநில பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் படித்து வருகிறோம். ஒரு மொழி ஒரு மனிதனுக்கு சமம். மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொண்டால் இன்னொரு மனிதர்களுடன் வாழ்வதற்கு சமம். இதில் ஒரு மொழி திணிப்பு என்ற கருத்து இல்லை. மூன்றாவதாக எங்களுக்கு பிடித்த மொழியை படிக்க தயாராக உள்ளோம். வேறு மொழி வேண்டாம் என்ற கருத்து எங்களிடம் இல்லை. மாணவர்களின் சில பெற்றோர்கள் தனியாக வேறு மொழியை படிக்க தனி வகுப்புக்கு அனுப்பி வருகின்றனர். மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கும் போது அது மாநில அரசு பாடத்திட்ட பள்ளியிலே கிடைத்தால் வரவேற்கத்தக்கது.

வேலைவாய்ப்புக்கு ஏற்றது

-என். தியானவர்ஷன்ஒட்டன்சத்திரம்சி.பி.எஸ்..இ., பள்ளியில் மூன்றாவது மொழியாக ஹிந்தியும் கற்று வருகிறேன். இதன் மூலம் மற்ற மாநிலங்களில் உள்ள கலாசார பண்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய தடையாக இருப்பது மொழி பிரச்னையே. சி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஹிந்தியையும் ஒரு பாடமாக படிப்பதால் கல்லுாரி முடித்த பிறகு பிற மாநிலங்களில் பணிபுரிய வாய்ப்பு சுலபமாக கிடைக்கும். மேலும் புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் அந்த மொழியில் உள்ள இலக்கிய வளங்களை கற்று கொள்ள முடியும். சிறு குழந்தைகள் புதிய மொழியை சுலபமாக கற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து மூன்றாவது ஒரு மொழியை கற்று கொள்வதால் நன்மைதான் அதிகம்.

ஹிந்தி படிப்பது தவறு இல்லை

--பி.கிருஷ்ணபாண்டிசெம்பட்டிஒவ்வொரு மொழியிலும் உள்ள சிந்தனைகளை அந்தந்த மொழியின் வழியில் படிப்பது அவற்றின் முழு பரிமாணத்தை புரிந்து கொள்ள உதவும். பள்ளிகளில் தமிழும் ஆங்கிலமும் மொழி பாடமாக இருப்பது போல் ஹிந்தியும் விரும்பும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் கல்விக் கொள்கைகளில் மேம்பாட்டை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். கல்வி முடித்த பின் எதிர்காலத்திற்கான வேலை, வணிகம், வாழ்க்கை முறைகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சூழலில் இந்த கொள்கை மிகவும் உதவிகரமாக இருக்கும். நாட்டின் பல மொழி பாரம்பரியத்தை தொடரவும், மொழியறிவின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கவும் கூடுதலாக ஹிந்தியை படிப்பதில் தவறு இல்லை.

3வது மொழி கற்பதே நல்லது

-ஹர்ஷவர்தன்திண்டுக்கல்சி.பி.எஸ்.இ., வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் வெளி மாநிலம், நாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்கின்றனர். அங்கே செல்லும் போது தமிழ், ஆங்கிலம் தவிர்த்து கூடுதலாக ஒரு மொழி தேவை. மாணவர்கள் வெளியில் ஹிந்தி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று எளிதில் படிக்கின்றனர். மூன்றாவது மொழியை படிப்பதால் நம் எதிர்காலம் தான் நல்ல முறையில் அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

நான் N
பிப் 24, 2025 14:29

தமிழ் நாட்டைவிட மற்ற மாநிலங்கள் முன்னேறிவிட்டது என தாங்கள் நினைத்தால் ஹிந்தி கற்பதில் எந்த முறன்பாடுமில்லை. ஆனால் எந்த ஒரு மொழிக்கு சரியான வரலாறு தமிழை விட இல்லையோ அதனை கற்றதனால் என்ன பயன்?


Nirmal Senthivel
பிப் 22, 2025 17:04

மூன்றாவது மொழி என்ற ஒன்று இங்கு தேவை இல்லை. அவரவருக்கு என்ன மொழி கற்க வேண்டுமோ அதை யார் வேண்டுமானாலும் தனியாக கற்றுக்கொள்ளலாம். அதை யாரும் இங்கு தடுக்க வில்லை. இட் கம்பனிகள் இங்கு இந்தியில் இயங்குகின்றது. அதிகப்படியான பன்னாட்டு கம்பனிகளில். ஹிந்தி ஆதிக்கம் செலுத்துகிறதா. இந்திய மொழிகளில் தொண்மையானது தமிழ். அதை அனைத்து மாநிலஙகளிலுளும் அமல் படுத்துங்கள்.


Jaya Kumar
பிப் 22, 2025 13:06

மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்வது எதிர்க்காலத்தில் எந்த பயனையும் தரப்போவதில்லை.மாறாக,தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப் போகிறது.மூன்றாவது மொழியின் மோகத்தால் தமிழ் மாணவர்கள் தாய்மொழியாம் தமிழை புறக்கணிக்கும் நிலை வரலாம். மேலும் மும்மொழிக்கல்விக்கொள்கையினால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்க்குலையலாம்..


Balamurugan Ranganathan
பிப் 22, 2025 06:06

நான் தமிழ்வழிக் கல்வி முறையில் தான் படித்தேன். வட இந்தியாவில் பணி புரிந்து வருகிறேன். நான் இங்கு வந்த பிறகு தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன். ஒரு மொழியை தேவையெனில் கற்றுக் கொள்வது உத்தமம். மூன்றாவது மொழி தேவையில்லாத சுமையைக் கொடுக்கும். மற்றபடி இது அரசியல் ஆதாயத்துக்காக ஏற்படுத்தப்படும் பிரச்சினை. முதலில் ஆங்கிலத்தை ஒழுங்காக கற்றுக் கொடுங்கள்.


Kumar
பிப் 21, 2025 18:48

மூன்றாவது மொழி கற்பது நல்லது தான்... தென் இந்தியாவில் ஹிந்தியைக் கற்கச் சொல்வதைப் போல வட இந்தியாவில் தமிழைப் பாடமாக அவர்களின் பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்க்க சொல்லுங்கள்... பாவம் இங்கே வேலைக்கு வரும் வட இந்தியர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்... தமிழகத்தில் இரண்டாவது மொழிக்கே அல்லல் படுகிறோம்.... மனம் தொட்டு சொல்லுங்கள் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.... மதிப்பெண்களுக்குமட்டுமே அந்த மொழியை படிக்கிறோம்.... மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் கூட அவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுவாரா என்றால் சந்தேகம் தான்....


NAGARAJAN
பிப் 21, 2025 07:57

மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க வேண்டியது தான். அதுக்காக இப்படியா. . இப்போது அண்ணாமலைக்கும். .


Stalin A
பிப் 21, 2025 07:33

எனக்கு தேவை இருந்தால் இந்தி கத்துக்க போறேன்... இந்தி இங்க கத்துகிட்டா மட்டும் போதாது தம்பி... பேச பேச தான் எந்த ஒரு மொழியும் கத்துக்க முடியும்... ஒரு வேளை வடக்கன் பக்கம் போனால் அங்க போய் கத்துக்குறேன்.. அப்றம் எவனோ இந்தி தெரியலனா கேவலமா இருக்குனு சொன்னானே, அவ்ளோ கேவலமா இருந்தா போ.... பொழைக்க வந்தவன் இங்க அழகாக தமிழ் பேசுறான் அவனுக்கு தேவைன்ன அவன் தான் மொழி கத்துக்கணும் ... நீயும் அங்க போய் பொளைக்க போரன்ன நீ அங்க போய் பேசி பேசி கத்துக்க... இந்தி காரன் எல்லாரும் தமிழ் கத்துகிட்டு தான் இங்க பாணி பூரி விக்குறான்னா....


Jerry
பிப் 21, 2025 10:14

அருமையாக சொன்னீர்கள்


Velusamy Dhanaraju
பிப் 21, 2025 21:50

நீ இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான். இங்கே எல்லா இடங்களிலும் அவங்க தான் வேலை செய்யப் போறாங்க இன்னும் சில வருடங்களில். அப்போது தான் உன் புத்திக்கு உரைக்கும்


Ganesan
பிப் 20, 2025 20:33

தட்சிணா பிரசாத் சபாவில் படிக்கட்டுமே யார் வேணாம் என்று சொன்னாங்க


Jayaraman
பிப் 20, 2025 20:33

மொழி கற்பதில் எந்த தவறும் இல்லை.தடுப்பதே தவறு.


Thiyagu
பிப் 20, 2025 17:03

தாங்கள் ஆசிரியராக இருந்து பேசலாம்.. அன்றாட மக்களைப் பற்றி கொஞ்சம் யோசிக்கணும்.. ஏன் நம்ம தமிழ்நாட்டுக்காரர்கள் அங்க இல்லாமையா இருக்காங்க..?. முதல்ல அவன் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பான்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை