மேலும் செய்திகள்
கும்பாபிஷேகம்..
29-May-2025
வடமதுரை: வடமதுரை போஜனம்பட்டியில் ஸ்ரீ விநாயகர், முருகன், மாரியம்மன், சப்த கன்னிமார், கிருஷ்ணர், கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருமகள் வேள்வியுடன் துவங்கிய விழாவில் 4 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கொல்லப்பட்டி சுயம்பு பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், வீரா சாமிநாதன், நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.
29-May-2025