மேலும் செய்திகள்
மகாளய அமாவாசை விழா
09-Nov-2026
நத்தம்: நத்தம் அருகே பாலப்பட்டி நல்லமுத்தன், வீரசின்னம்மாள், மாயபெருமாள் கோயில்களில் கும்பாபிஷேக விழா இன்று (நவ.,16) நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூர்ணாஹூதி, லட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
09-Nov-2026