உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் 912 குடியிருப்புகள் கட்ட டெண்டர்

ஒட்டன்சத்திரத்தில் 912 குடியிருப்புகள் கட்ட டெண்டர்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனுார் பேரூராட்சியில் அடுக்குமாடியில் 912 குடியிருப்புகள் கட்டுவதற்கு டெண்டர் ஒப்புதல் பெறப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என சட்டசபை தேர்தலின் போது அமைச்சர் சக்கரபாணி வாக்குறுதி கொடுத்திருந்தார். இதன் பயனாக தமிழ்நாடு முதலமைச்சர், நகர் புற மேம்பாட்டு நல வாரியம் மூலம் வீடுகள் கட்ட அனுமதி அளித்தார்.இதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் வினோபா நகரில் 3 மாடிகளுடன் 480 குடியிருப்புகள் ,கீரனுார் அண்ணா நகரில் மூன்று அடுக்கு மாடிகளுடன் 432 குடியிருப்புகள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.அமைச்சர் சக்கரபாணி கூறுகையில்,இதன் மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சி ,கீரனுார் பேரூராட்சியில் வீடில்லாத ஏழை மக்களின் கனவு நிறைவேறி உள்ளது என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ