மேலும் செய்திகள்
போதையில் மோதல்; பாட்டில் குத்து
05-Oct-2024
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் வீட்டில் புகை பிடித்தபோது பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலியானார்.வேடசந்துாரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது 47. திருமணம் ஆகாத நிலையில் தாயாருடன் வசித்து வந்தார். தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் இருந்த சாகுல் ஹமீது சாப்பிட்டுவிட்டு பீடி புகைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பட்டாசுகள் மீது பொறிபட்டு தீப்பற்றியது. இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் சாகுல் ஹமீது உடல் கருகி பலியானார்.வெடி சத்தத்தை தொடர்ந்து காஸ் சிலிண்டர் வெடித்ததாக கருதிய அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை, போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். சாகுல்அமீது வீட்டிற்கு பட்டாசு எப்படி வந்தது என வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Oct-2024