மேலும் செய்திகள்
சீமை கருவேல மரங்களால் காடாக உருமாறிய காவிரி
01-Apr-2025
கள்ளிமந்தையம், : பல ஆண்டுகளாக வறண்டு போய் காணப்படும் பாறைவலசு குலத்திற்கு நல்லதங்காள் ஆற்று நீரை கொண்டு வர வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தொப்பம்பட்டி ஒன்றியம் பாலப்பன்பட்டி ஊராட்சியில் உள்ளது பாறை வலசு குளம். 2.24 எக்டேரில் உள்ள இக்குளத்தின் ஒரே நீர் ஆதாரம் மழைகாலத்தில் புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் மட்டுமே. குளம் நிரம்பி மறுகால் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நீர் வழித்தடங்கள்,மறுகால் செல்லும் பாதைகள் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்து பகுதியில் பல இடங்களில் சீமை கருவேல் மரங்கள் முளைத்துள்ளன. குளத்தை துார்வாரினால் அதிக தண்ணீரை சேமிக்க முடியும். இதன்மூலம் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு சுற்றுப்பகுதிகளில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும் குடிநீர் பிரச்னையும் தீர்க்கப்படும். கருவேல மரங்களை அகற்றுங்க
சின்னச்சாமி, விவசாயி, பாலப்பன்பட்டி: இக் குளம் நிரம்பி பல ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கன மழை பெய்யும் போது ஏற்படும் காட்டாற்று வெள்ளம் ஒன்றே இக்குளத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றி குளத்தை துார்வார வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இப்பகுதி செழிப்பான நிலங்களாக மாறும் வாய்ப்புள்ளது.மேலும் சுற்றிய கிராம பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. தேவை நல்லதங்காள் ஆற்றுநீர்
சின்னச்சாமி, விவசாயி, பாலப்பன்பட்டி:குளம் நிரம்பி மறுகால் செல்லும்போது குளத்து புதுார், பெருமாள் கோயில் வலசு, அப்பியம்பட்டி நால்ரோடு வரை 3 கி.மீ. துாரம் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண் தொழில் சிறப்பாக நடைபெறும். குளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் துாரத்தில் உள்ள நல்லதங்காள் ஆற்றில் இருந்து வாய்க்கால் வெட்டி இக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Apr-2025