உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலையில் திருவாதிரை நோன்பு

மலையில் திருவாதிரை நோன்பு

தாண்டிக்குடி: கொடைக்கானல் ,தாண்டிக்குடி மலைப்பகுதியில் திருவாதிரை நோன்பை சுமங்கலிகள் கடைபிடித்தனர்.மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி, பாச்சலுார் ஆடலுார், பன்றிமலை, கொடலங்காடு, மன்னவனுார், பெரியூரில் ஆருத்ரா தரிசனம் திருவாதிரையன்று சுமங்கலிகள் மாங்கல்ய நோன்பு இருந்தனர். 16 வகையான காய்கறிகள் ,உணவு பதார்த்தங்களை சமைத்து புத்தாடை அணிந்து வருகை தரும் சுமங்கலிகளுக்கு மாங்கல்யம் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல்,புத்தாடை வழங்கி ஆசீர்வாதம் பெற்றனர். திருவாதிரை அன்று மலைப்பகுதியில் கிடைக்கும் பட்டிக்காய், வெள்ளைப் பூ, பத்தினி பூ, ஆற்று மணல் படைத்து வழிபாடும் செய்தனர். அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து அன்னதானம் வழங்கி மலைப்பகுதியில் ஒற்றுமையை வலுப்பெற செய்யும் நிகழ்ச்சியாக இது இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை