மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் தி.மு.க., முகவர்கள் கூட்டம்
06-Nov-2024
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக ஐம்பெரும் விழா, மாவட்ட மாநாடு நடைபெற்றது. பங்கேற்றவர்களுக்கு தமிழக அரசின் சீர் மரபினர் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வழங்கினார். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது, கள்ளர் பள்ளிகள், விடுதிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணை 40ஐ ரத்து செய்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். சீர் மரபினர் நலவாரிய மாநில உறுப்பினர் சந்திரன், பொருளாளர் இளங்கோ, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மாயாண்டி, ஒருங்கிணைப்பாளர் காசிமாயன், ஒன்றிய கவுன்சிலர் லலிதா, முன்னாள் எம்.பி., உதயகுமார் பங்கேற்றனர்.
06-Nov-2024