உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சொர்க்க வாசல் நாளை திறப்பு

 சொர்க்க வாசல் நாளை திறப்பு

வடமதுரை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (டிச.30) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முன்னதாக அதிகாலை 4:00 மணி துவங்கி திருமஞ்சனம், உஷகால பூஜை, ஆழ்வார் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்து காலை 7:00 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தென்னம்பட்டி அருள்மலை ஆதிநாதபெருமாள், துாங்கனம்பட்டி வெங்கடேசப் பெருமாள், மண்டபம்புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை