கல்வியுடன், கலைகளுக்கும் முக்கியத்துவம்
ஒட்டன்சத்திரம்
கல்வியையும் கலையையும் இரு கண்களாக பாவித்து பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ அதற்கு சமமாக மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்ததும் வகையில் கலை , விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆற்றல், அன்பு ,அறிவு என இவற்றின் இணக்கமான வளர்ச்சியை குறி கோளாகக் கொண்டு சுய ஒழுக்கம் ,சுய திறமையான மாணவர்களாக மாறுவதற்கு முன்னோக்கி செல்லும் இப்பள்ளி,மன அழுத்தம் இல்லாத திறன் அடிப்படையிலான கல்வியையும் ஊக்குவிக்கிறது. பல்துறையிலும் வளர்ச்சி
பட்டாபிராமன், பள்ளி செயலாளர்: முழுமையான கல்வி, ஒழுக்கம், கலை, விளையாட்டுடன் ,நீட்., ஜே.இ.இ., ஐ .ஐ.டி., போன்ற நுழைவு தேர்வு,போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியுடன் மாணவர்களை வெற்றி பெற செய்வதே எங்களின் நோக்கம். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களை பணியாளர்களாக கருதிடாமல் ஒரே குடும்ப உறுப்பினர்களாக எண்ணி கூட்டு முயற்சி உழைப்பின் காரணமாக, ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்று முன்னணி நிறுவனங்களில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். வழிகாட்டுதலுடன் திட்டமிடல்
சவும்யா, பள்ளி முதல்வர்: விளையாட்டு, நடனம், இசைக்கருவி பயிற்சி, பாடல் வகுப்பு, ஓவியம், நாடகம் சதுரங்கம், கேரம், ஸ்கேட்டிங் துறைகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதால் இப்பள்ளியின் ஆண்டு விழாக்களில் மாணவர்கள் தங்கள் திறமைகளை அற்புதமாக வெளிக்காட்டி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதி மாணவர்களின் வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தனித்துவ முறையில் பயிற்சி , காலை மாலை நேர சிறப்பு வகுப்புகள்,வாராந்திர தேர்வு என மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியதாலும் சிறந்த மாணவர்களை உருவாக்க முடிகிறது . மட்டற்ற மகிழ்ச்சி
ராஜ் ரித்திகா, மாணவி: ஆண்டு விழாவில் மாணவர்களின் நடனங்கள், நாடகங்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிப்பு உணர்ச்சி பூர்வமாக இருந்தது.11 ஆண்டுகளாக இப்பள்ளியில் படித்து வருகிறேன் . காந்தியடிகள் சொன்னதைப் போல் வீட்டுச் சூழலை போல் பள்ளியின் சூழலும் ஒருசேர அமைந்தால் மட்டுமே கல்வி நிலை மேம்படும் என்பதை உண்மையாக்கியது இப்பள்ளி. என் ஐயங்களை நீக்கி வழிபிறழாமல் நெறிப்படுத்தி கல்வியை தவிர கலைகளிலும் என்னை உச்சி முகர்ந்திட செய்திட்ட பள்ளியின் மாணவி நான் என்று கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கலை நிகழ்ச்சிகள் அருமை
ரித்திக் ரிஷி, மாணவன்:மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அருமையாக இருந்தது. நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண் பெற்றிட என் பள்ளி ஆசிரியர்களே முதல் காரணம். அதை பாராட்டும் விதமாக சான்றிதழும் வெகுமதியும் பரிசளித்தனர். என்னுடைய கற்றல் நிலையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் சிறப்பு பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டு பயிற்சித்தாள் தேர்வுகள் என எல்லா நிலையிலும் என்னை வழிப்படுத்தி நான் மருத்துவராகும் கனவினை மெய்ப்பித்துக் காட்டியதில் இப்பள்ளிக்கு நிகர் ஏதுமில்லை. கலை, கல்வியில் சாதிக்கும் பள்ளி
டாக்டர் டி.துரைமுருகன், பெற்றோர்: ஒவ்வொரு நிலை வகுப்புகளுக்கான தனித்தனி கட்டடங்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் என கல்வியை மேம்படுத்துகின்றனர். நவீன வசதி கொண்ட வகுப்பறைகள் , குழு செயல்பாடுகள்இன்றைய கல்வி நிலைக்கேற்ப கணிப்பொறி ஆய்வகம், விளையாட்டு அரங்கம், சிறப்பு பயிற்சியாளர்கள், சிறந்த சுற்றுப்புற சூழல் வசதி, அலுவலக மேலாண்மை பிரிவு நீட் ஜே.இ.இ., ஐ.ஐ. டி., பயிற்சி என இவை அனைத்தும் ஒரே இடத்தில் அமையப்பெற்றுள்ளதால் கலைகளிலும் கல்வியிலும் இப்பள்ளி சாதித்து வருகிறது.